
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி மூத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை குஸ்பூ இவர் 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் இளையராஜா இசையும் வெளியான படம் தான் ‘சின்ன தம்பி’ இப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் இப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது .இப்படத்தின் மலரும் நினைவுகளைப் பற்றி சமூக வலைதளங்களில் குஷ்பூ பதிவிட்டுயுள்ளார்.
அதில் 33 ஆண்டுகள் போனதே தெரியவில்லை தமிழக மக்கள் சின்னத்தம்பி படத்தை 33 ஆண்டுகளாகி மறக்கவில்லை எங்கள் வாழ்க்கையிலேயே அப்படியே மாற்றிய படம் தான் சின்னதம்பி.இந்த படத்தால் எங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பு, பாசமும் கிடைத்தது. இன்று வரை ஒரு நம்ப முடியாத வெற்றியாக தான் இந்த படம் உள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக ஒவ்வொருவர் மீதும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் எனது அன்பான இயக்குனர் பி.வாசு மற்றும் என்னுடன் நடித்த நடிகர் பிரபு எப்போதும் எனக்கு ஸ்பெஸல் தான். இப்படத்தில் இளையராஜாவின் மேஜிக் இசை எல்லாம் காலத்திற்கும் நம்மை வேட்டையாட வைக்கும் ‘சின்னத் தம்பி’ 33 வருடங்கள் நிறைவடைந்துள்ளது என்று குஷ்பூ கூறியுள்ளார்.