
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தன் நடிகை லட்சுமி மேனன். இவர் மாடலாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. மலையாளத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘ரகுவிந்தே ஸ்வந்தம் ராசியா’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானர். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளியான சுதந்திரபாண்டியன் திரைப்படத்தின் மூலமா தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, மிருதன், புலிக்குத்தி பாண்டி போன்ற பல படங்களை இவர் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி 2. தற்போது மாலை ,சப்தம் என்ற இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் ஏப்ரல் 12ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்கம்பட்டி என்ற கிராமத்தில் பூவை அம்மன் கோவில் திருவிழாவில் நடிகை லட்சுமி மேனன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.கும்கி படத்தில் இடம்பெற்ற ‘சொய்ங்…சொய்ங்…’ பாடலுக்கு ஆடியவரை இன்னொரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று ரசிகர்கள் ஆரவாரம் கேட்டனர்.
இதனால், லட்சுமி மேனன் நடித்தப் பிற படங்களில் இருந்தும் பாடல்கள் ஒலிக்கப்பட, நடனமாடி அங்கிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.பொதுமக்கள் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று மேடையை நோக்கி வந்தனர்.இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த காவல்துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தினர்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram