
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கைச் சேந்த செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.
தற்போது இவர் அன்னபூரணி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
ஓரிரு படங்களில் இவர் நடித்து வந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி ரூட்டில் இறங்கி படு மோசமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளர். தற்போது இவர் பொங்கலை தோழியருடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.