
விஜய் டிவியில் 90ஸ் களில் ஃபேவரட்டாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் ‘லொள்ளு சபா’ இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் தான் நடிகர் ஆன்டனி. இவர் சமீபத்தில் தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே எனக்கு அடிக்கடி இருமல் வரும், அதை நான் சரியாக கவனிக்கவில்லை.தற்பொழுது எனக்கு ஆஸ்துமா மிக முற்றிய நிலையில் இருக்கிறது. என்னால் படுத்து உறங்க முடியவில்லை.அப்படி படுத்து உறங்கினால் நெஞ்சுப் பகுதியில் ஏதோ அடைப்பது போல தோன்றும். அதனால் தொடர்ச்சியாக நின்று கொண்டே தூங்க ஆரம்பித்தேன்.
இப்பொழுது எனக்கு வெரிகோஸ் வெயின் பிரச்சனையும் வந்திருக்கிறது. ப்ளாடரில் பிரச்சனை இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். தொகுப்பாளர் நீங்கள் பணரீதியாக இதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு அவர் என்னோட சரியில்லாத நண்பர்கள் காரணத்தால் வீடு, நிலம் எல்லாம் இழந்து விட்டுட்டேன்.எனக்கு இப்போது பினான்சியலா சப்போர்ட் சந்தானம் யோகி பாபு, ஜான்சன், டைரக்டர் ஆனந்த், மாறன் இவர்கள் தான் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். சந்தானம் தான் மருத்துவமனையில் அட்மிட் செய்தார் இப்ப அதற்கான ட்ரீட்மெண்ட் போய்க் கொண்டுள்ளது.
இன்னும் ஒரு வாரம் இல்லை என்றால் பத்து நாள் இங்க தான் இருப்பேன். நடிகர் சந்தானம் ஆபீஸ்ல ஒர்க் பண்ண சொன்னார் நான் அங்கே ஒர்க் பண்ணி இருக்கலாம். ஆனால் நான் ஆபீஸ் போக வருவேன் வொர்க் பண்ண மாட்டேன். அவர் ஏன்டா வெளியே போற இங்கே ஒர்க் பண்ணு என்கூட இருந்தா உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். ஸ்கிரிப்ட் எழுது என்று சொல்வார். நான் முயற்சி செய்கிறேன் என்று கூறி வெளியே சென்றேன் என்னை விட்டு எல்லாம் போய் விட்டது என்று உருக்கமாக கூறியுள்ளார்.