மாயா அம்மா இன்னுமா உயிரோடு இருக்காங்க… கமெண்ட் போட்டவரை வெளுத்து வாங்கும் அவரது சகோதரி..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த சீசனில் பல பல திருப்பங்களுடன் பரபரப்பாகும் வித விருப்பமும் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த வகையில் சில சம்பவங்களும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து இருக்கின்றனர். அதில் நிக்சன் ஐசு மற்றும் தற்போது மாயா, விஷ்ணுவை எதிர்பாரா விதமாக முத்தம் வைக்கும் காட்சி போன்றவை பிக்பாஸ் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டு உள்ளது.

   

இவ்வாறு பல வில்லத்தனமான வேலைகள் பார்த்து இந்த சீசனில் ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருக்கிறார் மாயா. இந்த வாரம் யார் வெளியேறுவார் என தெரியவில்லை.

இந்நிலையில் மாயாவின் சகோதரி இணையத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்டில் இவ்வாறு மெசேஜ் செய்துள்ளார். அதில் உங்க அம்மா எப்படி இருக்காங்க. உடனே அதற்கு மாயாவின் சகோதரி நல்லா இருக்காங்க எனவும் பதில் அளித்துள்ளார். உடனே அதற்கு அந்த நபர் இன்னுமா அந்த அம்மா சாகாமல் இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த கோபத்தில் மாயாவின் சகோதரி இவ்வாறு பேசி உள்ளார்.

அதில் இந்த வன்மம் தேவையா? தாயைப் பற்றி நீ பேசும் பொழுது உன்னுடைய தாயைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா. நிகழ்ச்சியில் கெட்டவர்களாக காட்டப்படுபவர்கள் வெளியே நல்லவர்களாக இருக்கலாம், உள்ளே நல்லவராக இருப்பவர் வெளியே கேடு கெட்டவராக கூட இருக்கலாம்.

பிக்பாஸில் 60 கேமராக்களில் பதிவாகி வரும் காட்சிகள் 20% மட்டுமே உண்மை, இதனால் உங்களுடைய வன்மத்தை போட்டியாளர்களுக்கு போடும் ஓட்டுகளில் காண்பியுங்கள். இவ்வாறு மாயா சகோதரி கூறியுள்ளது வைரலாகி வருகிறது.