
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் தான் மெட்டி ஒலி. இந்த சீரியலானது மக்கள் மத்தியில் இன்று வரையிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. மெட்டி ஒலி சீரியல் என்ற பெயரை கேட்டாலே இந்த சீரியலின் தலைப்பு பாடலான “அம்மி அம்மி அம்மி மிதித்து.. அருந்ததி முகம் பார்த்து”. என்ற பாடல் தான் அனைவரும் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவர்.
இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் அவர்கள் இயக்கியுள்ளார். இதில் குடும்ப உறவுகளால் 5 சகோதரிகளுக்குள் ஏற்படும் சிக்கலை குறித்தும் இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் காவேரி, சரோவாக காயத்ரி, லீலாவாக வனஜா, விஜியாக உமா மற்றும் பவானியாக ரேவதிப்ரியா நடித்தனர். இந்த ஒளிபரப்பாகி 22 வருடங்கள் ஆகும் நிலையில் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
என் நிலையில் இதில் காவிரி, வனஜா மற்றும் காயத்ரி ஆகியோர் மூன்று பேரும் சந்தித்துள்ளனர். இவர்களின் தங்கையாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா 2021 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் காலமானார். இவரது கடைசி தங்கையாக நடித்த ரேவதி பிரியா இதில் கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் மெட்டி ஒலி சீரியல் சகோதரிகள் தற்போது இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.