
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, கலெக்டராக நடித்து பிரபலமான படம் அறம். இந்த படத்தை கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட உலகத்துக்கே உரிய எந்த ஒரு சிறு ‘கமர்ஷியல்’ சமரசமும் செய்துகொள்ளாமல் கச்சிதமான திரைக்கதையுடன் திரையில் கொண்டு வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கோபி நயினார்.
இவர் அறம் படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து, தற்போது அகரம் காலனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் சென்னையில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் லைட்மேன் சண்முகம், சூட்டிங் தளத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
உடனே அவரை பட குழுவினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.