
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படம் மக்களிடைய நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு வரை பருத்திவீரன் சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டது. அதாவது படத்தின் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா மிரட்டி வாங்கிவிட்டதாகவும், பருத்திவீரன் படத்தை அமீர் தான் தயாரித்ததாகவும் பிரச்சினை எழுந்தது.
ஆனால், இறுதியில் ஞானவேல்ராஜா முழு தொகையையும் கொடுக்காமல் எழுதி வாங்கிவிட்டதாக அமீர் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இது பிரச்சினையாக உருவெடுத்து பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ரைட்ஸ் டூடியோ க்ரீன் வசம் உள்ள பருத்திவீரன் திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், மீண்டும் இந்தப் படத்தை வெளியிட்டால் அதில் ஞானவேல்ராஜாவுக்கு தான் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் ரிலீஸாகவிருந்தால் அதற்கு அமீரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீண்டும் இந்த பிரச்சினையால் ஒரு கலவரம் வெடிக்கும் என்று தெரிகிறது.