
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இதனைத்தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கடந்த மாதம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவிற்கு சில முன்னணி நடிகர்கள் நேரில் செல்ல முடியாமல் போனது. அந்த வகையில் நடிகர் சூர்யாவும் தற்போது படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
அதன் பின் அண்மையில் கேப்டன் சமாதிக்கு சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் புத்தாண்டை அவர் கொட்டும் பனியில் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து பின்லாந்து நாட்டில் கொண்டாடியுள்ளார். அங்கு அவர்கள் பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. வீடியோ இதோ..