
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடலாசிரியர்களின் ஒருவர் தான் பாடலாசிரியர் கபிலன். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக பாடல் எழுதத் தொடங்கினார். அதன் பிறகு இவர்’ தில்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து நரசிம்மா,அள்ளித்தந்த வானம்,தவசி யூத் , பாய்ஸ், யான் போன்ற பல படத்திற்கு பாடல் ஆசிரியராக பாடல்களை எழுதி உள்ளார். இந்நிலையில் இவர் பாடல் ஆசிரியர் மட்டுமல்ல ஒரு நடிகரும் கூட. பாடல் ஆசிரியர் கபிலன் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தூரிகை என்ற மகளும் பௌத்தன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் இவரது மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த சினிமா துறையும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றை அளித்த பேட்டியில், அவர் கடந்த வருடம் என் மகளின் இறப்பு தான் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை தருகிறது. எல்லாம் செய்தும் ஏன் அவர் தற்கொலை செய்து கொண்டார். என்று இன்னும் தெரியவில்லை.
என்னை போல் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் தன் மகள் எங்கே செல்கிறார்கள் அவர்கள் நண்பர்கள் யார் என கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.நான் கூட பரவாயில்லை வெளியே செல்கின்றேன் ஆனால் என் மனைவியோ அந்த வீட்டினுள் தான் இருக்கிறார். வீட்டையும் மாற்ற விட மாட்டேங்கிறார். என் மகள் வருகிறாள் காபி கொடுக்கிறாள் என்ற பல சிந்தனைகள் அவர்களுக்குள் ஓடி இருக்கிறது.
வீட்டின் எந்த பக்கம் பார்த்தாலும் மகள் இருப்பது போலவே தோன்றி வருகிறது. வீட்டில் நாங்கள் சமைத்து ஒரு வருடம் ஆகிறது.என் பையன் பயனுக்காக வெளியே ஆடர் செய்து தருவோம். இன்னும் அந்த இறப்பிலிருந்து மீளவில்லை என்று கூறுகிறார். தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வழியாக வைரலாகி வருகிறது.