இந்த வருடம் முதலிலேயே நம்ம தேவசேனாவிற்கு திருமணமாம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் ஒருவர் தான்  நடிகை அனுஷ்கா.இவர் இயக்குனர்  சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘இரண்டு’ படத்தில் நடித்த தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் அருந்ததி படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை   உருவாக்கிக் கொண்டார்.  அதைத் தொடர்ந்து  வேட்டைக்காரன், சிங்கம் , ருத்ரமாதேவி, பாகுபலி போன்ற சூப்பர் ஹிட்  படங்களில் நடித்துள்ளார்.

   

அதன் பிறகு இவர் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படத்திற்காக உடல் எடை அதிகரித்தவர் அதன் பிறகு உடல் எடையை குறைக்க பல விதமான உடற்பயிற்சிகள் செய்தும்  பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இழந்தார் நடிகை அனுஷ்கா.தற்பொழுது இவர் ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தில் நடித்துள்ள.ர்   இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாகுபலி படத்தில் நடிக்கும் போது நாயகன் பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டார். இந்நிலையில் பிரபாஸ் வீட்டில் காதலுக்கு ஓகே சொன்னதாகவும்  அடுத்த வருடம் இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொள்வார்கள் என சமூக வலைதளகளில் வைரலானது. இந்நிலையில் இவர்கள் இருவரது  நிச்சயதார்த்தம் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.ஏப்ரல் மாதம்  திருமணம் செய்ய இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.