
நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என பலர் எதிர் பார்த்து வந்தனர். மேலும்”விஜய் மக்கள் இயக்கம்” மூலம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
இந்நிலையில் விஜயின் கட்சி பெயரான, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி பெயரில் ’க்’ என்ற எழுத்து வரவேண்டும் என்று சிலர் சுட்டி காட்டினர்.
எனவே அந்த எழுத்துப் பிழையை திருத்த அவர் முடிவு செய்துவிட்டதாகவும் ’தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.