சீரியலில் ரொமான்ஸில் பட்டைய கிளப்பும்.. விஜயின் தந்தை வைரலாகும் வீடியோ.,.

தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்  சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  அந்த வகையில் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் சீரியல் தான் கிழக்கு வாசல். இந்த சீரியலில்  விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

இவர் சினிமா இயக்குனர் என்ற காரணத்தினால் தனது எதார்த்தமான நடிப்பால்  மக்களை மிகவும் கவர்ந்து வருகிறார். இந்த சீரியலானது ஒரு கூட்டு குடும்ப வாழ்க்கையில் தத்தெடுத்த மகளுக்காக அப்பாவின் போராட்டம், மகளை  நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் வயதான காலத்தில் கூட கடினமான வேலைக்கு செல்லுவது போன்றவை  கதை களமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது சீரியல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில்  சந்திரசேகர் வயதான காலத்தில் கூட தனது மனைவிக்கு ஆசையாக பூ வாங்கி கொண்டுவந்து தலையில் வைத்து அழகு பார்க்கின்ற ரொமான்ஸை காட்சி வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களின்  கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.