பிச்சைக்காரன் பட நடிகை சாட்னாவுக்கு இவ்வளவு பெரிய மகானா !… வைரலாகும் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் ஆண்டனி. இவர்   நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் தான் நடிகை சாட்னா. இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

   

இப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவான படமாக  இருந்தாலும் நல்ல வசூலையும் பெற்று தந்தது. இவர் கேரளாவை  பூர்வீகமாக கொண்டவர். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.இப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு பிச்சைக்காரன் படத்தை  விநியோகம் செய்த கார்த்தி என்பவரை 2016 ஆம் ஆண்டு  திருமணம்  செய்து கொண்டார்.அண்மையில் சாட்னா தனது மகன் கிரணின் பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்  ஒன்று வெளியாகியுள்ளது இதை பார்த்து ரசிகர்கள் பிச்சைக்காரன் பட நடிகைக்கு  இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா… என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.