பொன்னி சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு.. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு.. வைரலாகும் புகைப்படங்கள் ..

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில்  ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு உள்ளது.

   

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் ‘பொன்னி’ இந்த சீரியலானது ஒளிபரப்பகி  குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த சீரியலை இயக்குனர் மனோஜ் குமார் இயக்கு வருகிறார். இதில் சபரி நாதன், ஷமிதா ஸ்ரீகுமார், வைஷு சுந்தர்,

ஸ்ரீதேவி அசோக் குமார்,ஈஸ்வர மூர்த்தி, ஜனனே பிரபு,  யுவன்ராஜ் நேத்ருன், ஷியா, ஜெயஸ்ரீ பினுராஜ், வேதாஸ்யா  போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

 

இந்த சீரியலில் உஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி அசோக் குமார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

 

அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இவர் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைந்த நிலையில் சின்னத்திரையில் தனது காலடித்தடத்தை படித்தார்.

 

இவர் ‘செல்லமடி  நீ எனக்கு’ என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானர். அதை தொடர்ந்து  தமிழில் இளவரசி, தங்கம்,

இரு மலர்கள்.வாணி ராணி,  செம்பருத்தி,  பூவே பூச்சூடவா,  ராஜா ராணி,  அரண்மனை கிளி , பொம்முக்குட்டி அம்மாவுக்கு,  பூவே உனக்காக போன்ற சீரியலில்  நடித்துள்ளார்.நடிகை ஸ்ரீதேவி அசோக்  குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும்ம் உள்ளார்.

தற்போது  சோசியல் மீடியாவை மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.  அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை  வழக்கமாக வைத்துள்ளார்.தற்போது இவருக்கு  வளைகாப்பு நடைபெறுள்ளது அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.