தன் மனைவியை இழிவு படுத்தியதால் ..ஸ்ருதியை வச்சு செய்த முத்து வைரலாகும் ப்ரோமோ வீடியோ…

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும்  சீரியல்களில் ஒன்று தான்  ‘சிறகடிக்க ஆசை’   இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலின் கதையானது பணத்தாசை பிடித்த மாமியார் மற்றும் அப்பாவி மருமகள் இடையே  நடைபெறும் பிரச்சனையாக இந்த தொடர் அமைந்துள்ளது.

   

இதில் மீனாவிடம் மூன்றாவது மருமகள் ஸ்ருதி தனது துணியை துவைத்து கொடுக்க பணம் கொடுத்து அசிங்கப்படுத்துகிறார். இதை தன் கணவர் முத்துவிடம் மிகுந்த வருத்தத்துடன் சொல்லி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

தற்போது இந்த சீரியலின்  promo வெளியாகி உள்ளது  அதில் மீனாவுக்காக அவர் ஒரு பூக்கடை வைத்து கொடுக்கிறார். அதை தன்  அப்பா, அம்மா முன்னிலையில் திறக்க அவர் தம்பி மனைவி  ஸ்ருதியை அழைத்து கடையை திறக்க சொல்லுகிறார். அதன் பின் அவர் கொடுத்த பணத்தையே திருப்பி கொடுத்து அசிங்கப்படுத்திவிடுகிறார் முத்து. இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது