
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி மூத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நிரோஷா. இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் எம் ஆர் ராதா வின் மகள். இவரின் உடன் பிறந்தோர் ராதிகா மற்றும் ராதா ரவி . நிரோஷா ‘தாலி பொண்ணுக்கு வேலி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்தார்.’ செந்தூரப்பூவே’ என்ற திரைப்படத்தில் ராம்கிவுடன் குடும்பப்பாங்கான நடித்தார். அதன் பிறகு நடிகர் ராம்கிவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்’ பாண்டியன் ஸ்டோர்ஸ் 2′ சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அக்கா ராதிகாவை சுவாரசியமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு முறை அக்கா வெளியே கிளம்பி கொண்டு இருந்தார் அப்போது அக்கா வேற எங்கேயோ போகிறார் என்று நானும் வருகிறேன் என்று சொன்னேன். சரி வா என்று கூட்டிப் போனார். அங்க ஒரு கடையில் ஒரு பெண்ணுக்கும் மூக்கும் குத்திக் கொண்டே இருந்தார்கள்.
அந்த காலத்தில் இப்ப இருக்கிற மாதிரி கன் சூட் கிடையாது ஊசிய வைத்து தான் மூக்கு குத்துவார்கள். அந்த பொண்ணுக்கு முடித்ததும் எங்க அக்காவை அந்த கடைக்காரர் வாங்க மேடம் நீங்க தான் அடுத்து என்று சொல்ல அப்போது அக்கா நாங்கள் ரெண்டு பேரா வந்து இருக்கிறோம் முதலில் என் தங்கைக்கு மூக்குக் குத்துங்கள் பிறகு நான் குத்திக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு ஷாகாகி விட்டது.
காரணம் எனக்கு மூக்கு குத்துற ஐடியாவே இல்லை நான் அப்ப வேண்டாம் அக்கா என்று சொன்னேன்.ஆனால் எங்கள் அக்கா மூக்கு குத்தனும்னு என்று ரொம்ப strict டகா சொன்னார். மறுப்பது பேச முடியவில்லை. பிறகு எனக்கு மூக்கு குத்தும் போது நான் பட்ட வேதனை பார்த்து அவர் மூக்கு குத்தாமல் எனக்கு மட்டும் குத்தினது போதும் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். என்னால் வலி தாங்க முடியாமல் நான் அழுக ஆரம்பித்து விட்டேன் என்று கூறியிருந்தார்.