
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி 1999 ஆம் ஆண்டு வெளியாகி சர்வதேச அளவில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் படையப்பா.
இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, அப்பாஸ், பிரீத்தா, நாசர், லட்சுமி, ராதா ரவி என பல நடிகர்கள் நடித்திருப்பார்கள் .
இந்த திரைப்படம் ஜப்பான் நாட்டில் மட்டும் 50 ஆயிரம் டாலர் மதிப்பீட்டில் வெளியானது. இதன் மதிப்பு அன்றைய தினத்தில் அம்பது கோடிக்கும் மேலாக இருக்கும்.
100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் பல திரையரங்குகளில் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் பலரும் திரையரங்குக்கு சென்று இப்படத்தை பார்த்து வருகிறார்கள்.
இப்படத்தில் இருக்கும் பாடல்கள் காட்சிகள், ரஜினி அவர்களின் மாஸ் சீன் என அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. இந்நிலையில் அப்படத்தின் சில காட்சிகள் இதோ…