தொடையழகி ரம்பாவின் 14 வது திருமண நாள்…. நீங்கள் இதுவரை கண்டிராத குடும்ப புகைப்படங்கள் இதோ…!!!

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி சினேகா, இடுப்பழகி சிம்ரன், கண்ணழகி மீனா என ஒவ்வொருத்தருக்கும் ஒரு பட்டம் இருப்பது போல தொடையழகி என்றும் வித்தியாசமான பட்டத்துடன் அழைக்கப்படுபவர் தான் ரம்பா.

   

90களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கின்றார்.

1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரம்பா.

அதன்பிறகு உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து கலக்கினார். இவர் 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வரும் ரம்பாவின் வாழ்க்கையில் விவாகரத்தும் இருந்தது.

ரம்பா இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற பிறகு 2016 ஆம் ஆண்டு கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார் .

பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு இருவரும் சமரச மையத்தில் பேசி மீண்டும் இணைந்தனர். அதன் பிறகு தான் மூன்றாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை ரம்பா .

தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தன்னுடைய 14 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடி இருந்தார். இந்நிலையில் அவரின் குடும்ப புகைப்படங்கள் இதோ..