மனைவி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரவீந்தர்..இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தமிழில் நட்புனா என்னனு தெரியுமா ,முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

   

இவர் சினிமாவின் தயாரிப்பாளர் என்பதைவிட பலருக்கும் பிக் பாஸ் விமர்சகராக  இவரை தெரியும்.

தற்போது பல திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து வரும் ரவீந்தர் திடீரென்று சீரியல் நடிகையான மகாலட்சுமி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்  நேற்றைய தினம்  பிறந்த நாளை முன்னிட்டு மகாலட்சுமிக்கு ரவீந்தர் நள்ளிரவு கேக் உடன் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதன்பிறகு  மகாலட்சுமி மனநலம் குன்றிய நபர்களுக்கான இடத்திற்கு அழைத்துச் சென்று உணவு தானம் செய்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.