
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 முதல் விஜய் டிவியில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இந்நிலையில் தற்போது 7-வது சீசன் நடைபெற்று முடிந்தது.
பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் பிரதீப் ஆண்டனி. இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடத்தி ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றி விட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்கள் பிரதிப்புக்காக இணையத்தில் கருத்துகளை தெரிவித்தனர். இதற்குக் காரணம் மாயா, பூர்ணிமா போன்ற சிலரின் கூட்டு சதியால், பிரதீப் பிக்பாஸ் டைட்டில் தட்டி சென்று விடுவார் என்ற எண்ணத்தில் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் வெளியே வந்த பிரதீப், இதற்கு எதிராக எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் பிரதீப்பை அழைத்துள்ளனர்.
மேலும் அவருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கௌரவமாக உற்சாக வரவேற்பு அளித்துள்ள, அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பிக்பாஸில் டைட்டில் வின்னருக்கு கூட இந்த ஒரு மரியாதை கிடைக்கவில்லையே, பிரதீப் எந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.