பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அதனால நோ யூஸ்.. ‘எஞ்சாமி எஞ்சாமி’ பாடலால் நொந்து போன சந்தோஷ நாராயணன்…

இன்றைய காலகட்டத்தில் ஆல்பம் சாங் என்று பாடல்கள்   சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற ஆல்பம் சாங்குகளும் உள்ளது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஆல்பம் சாங் ஆக வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சாங்கு தான் ‘எஞ்சாமி எஞ்சாமி’ இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார்.இப்பாடலை தெருக்குரல் அறிவு எழுதிய இப்பாடல் சுயாதீன ஆல்பமாக வெளியானது.

   

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய மாஜா தளத்தின் யூடியூப் சேனில் இப்பாடலின் உரிமையை பெற்றிருந்தது. இதற்கு யூடியூப் தளத்திலும் பார்வையாளர்களுக்கு பஞ்சமில்லை. இப்பாடல் பட்டிதொட்டி பிரபலமானது.அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே சர்ச்சை வெடித்தது.2022 ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில், எஞ்சாயி எஞ்சாமி பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களின்  கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் எஞ்சாமி என்ற பாடல் வீடியோ இப்பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தனக்கு ஒரு பைசா கூட வருமானம் இல்லை என்று சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ்சால பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சுயாதீன இசை கலைஞர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தனி தளம் தேவை என்று சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளார். இனி, சுயாதீன கலைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை, உங்களுக்கு கிடைக்க வேண்டியது வந்து தீரும் என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானும் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதாக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு பக்கபலமாக இருந்துள்ளார். அது மட்டுமின்றி, அறிவு, தீ, உட்பட எந்த கலைஞர்களுக்கும், எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் வருமானம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பதிலாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல்கள் மட்டுமே வந்ததாக குறிப்பிட்ட சந்தோஷ் நாராயணன், இப்பிரச்னையில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அறிவுக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.