பிக் பாஸ் முடிந்தவுடன் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்ட சரவணன் விக்ரம்… அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக  ஒளிபரப்பான சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீசன் 1’. இந்த சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தான் நடிகர் சரவணன் விக்ரம். இவர் அத்தொடர் முடிந்தவுடன் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார்.

   

இவர் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக எதுவும் செய்ய வில்லை என ஆரம்பத்தில் இருந்தே பல விமர்சனங்கள் வந்த நிலையில் செட் பிராப்பர்ட்டி ,மிச்சர் என மற்ற போட்டியாளர்கள் அவரை ட்ரோல் செய்து வந்தனர்.இந்நிலையில் இவர் 84 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில்  இருந்தார். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெளியேற்றினார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் கடைசி வாரத்தில் மீண்டும் வீட்டிற்குள் சென்றார் விக்ரம்.

அங்கு  விக்ரம் மாயாவிடம் பேசியதை பற்றி அவரது சொந்த தங்கை விமர்சித்தார். இன்னும் சமூக வலைதளங்களில் சரவணன் விக்ரம் ட்ரோல் செய்து வருகிறார்.இந்நிலையில் சரவணன் விக்ரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் “I quit my passion”  என குறிப்பிட்டு இந்த செய்தி வைரலாகி வருகிறது. தற்போது அதை நீக்கிவிட்டார்.