
தமிழ் சினிமாவில் 5 ஸ்டார், எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர். மேலும் இவர் கன்னட, மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கனிகா தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறார். இது TRPயில் சமீபகாலமாக பட்டையை கிளப்பி, மக்கள் மனதில் தனி இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த தொடரை திருச்செல்வம் இயக்கி, நடித்தும் வருகிறார். இந்த தொடரில் ஆதி குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி எனும் ரோலில் நடிகை கனிகா நடிக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவரான இவருக்கு தற்போது 41 வயது ஆகும்.
இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் போட்டோஸ், ஜிம் ஒர்கவுட் மற்றும் சுற்றுலா செல்லும் போட்டோஸ் போன்றவற்றை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை அசரவைக்கும் வகையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.