சீரியல் நடிகர் சஞ்சீவி மற்றும் ப்ரீத்தயின் பலரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள்..

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். இவர் ‘நம்பிக்கை’ என்ற சீரியல் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

   

அதை தொடர்ந்து இவர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில்  வரவேற்பு பெற்றார்.

இவர் மனைவி, யாரடி நீ மோகினி, கண்மணி, துளசி ,அவள், இதயம், விளக்கு வச்ச நேரத்துல, ரேகா ஐபிஎஸ் போன்ற பல சீரியல்களில்  நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல்  கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிகர் சஞ்சீவ்  தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் விஜய்யின் நண்பர். விஜயுடன் பல படங்களில் நண்பர் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருக்கிறார்.

தற்போது சன் டிவியில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கும் லட்சுமி சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது .

நடிகர் சஞ்சீவ் சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு லயா என்ற பெண் குழந்தை உள்ளார்.

தற்போது சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தியின் திருமணப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.