
திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் டிரண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்களால் சோசியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த போட்டோ விஜய் நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு இந்த நடிகையின் வீட்டு பக்கத்தில் தான் நடந்துள்ளது. அப்போது தான் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போட்டோவில் உள்ள குழந்தை தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான். ஆம் இவர் தான் நடிகை ஹீமா பிந்து, இவர் சிறு வயதில் நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நடிகை பிரபல தொலைக்காட்சியில் ‘இதயத்தை திருடாதே’ என்ற தொடரில் சஹானாவாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.
தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இலக்கியா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.