
தமிழ் சினிமாவில் வெள்ளித்துறையில் இருக்கும் நடிகர்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்த பிரபலமானவர் நடிகை காயத்ரி. இவர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.
சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த நடிகை காயத்ரி நடனம் கற்றுக் கொண்டார். பின்னர் தனது கணவருடன் சேர்ந்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமாவில் அறிமுகமானார்.
இவருக்கு முதன் முதலாக சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு என்று கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அரண்மனை கிளி சீரியலும் நடித்து வந்தார்.
இவருக்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை காயத்ரி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்திருக்கின்றார்.
மேலும் youtube சேனல் ஒன்றை வைத்து இருக்கும் இவர் தனது மகளுடன் எடுத்துக்கொள்ளும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இவரின் கணவர் ஏற்கனவே ஒரு டான்ஸ் ஸ்டுடியோ வைத்திருக்கும் நிலையில், மீண்டும் ஒரு டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை திறந்து இருக்கிறார்கள்.
அந்த டான்ஸ் ஸ்டூடியோ திறப்பு விழா பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.