
சின்னத்திரை சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. சீரியல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் சாய் காயத்ரி. இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் நடிகை மட்டுமல்ல தொகுப்பாளர் மற்றும் நடன கலைஞரும் கூட. இவர் முதல் முதலில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ கல்லூரி கதைகள் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானர்.
இதை தொடர்ந்து பல முன்னணி சேனல்களிலும் பணியாற்றி உள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் சோசீயல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.தற்போது இவர் “சாய் சீக்ரெட்ஸ்”
என்கிற பெயரில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறது.
அந்த கம்பெனியின் கீழ் அவர் தயாரிக்கும் ஹேர் ஆயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிக அளவில் வியாபாரம் நடைபெறுகிறது.இதை செய்தியை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அதில் ஹேர் ஆயில் தயாரிப்பதிலிருந்து பேக்கிங் டெலிவரி என ஒரு பெரிய குழுவே வேலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.
View this post on Instagram