
பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக் இரண்டாவது முறையாக கர்ப்பமான நிலையில் அவரின் வளகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதேவி.
அதைத்தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் சென்ற இவர்.செல்லம்மடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, நிலா ,கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் இவர் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.தற்போது பொன்னி மற்றும் மோதலும் காதலும் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு அசோகா சிண்டாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் தான் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரீதேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு ஸ்ரீதேவியை வாழ்த்தியிருந்தார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு புகழ், செந்தில்,
பொன்னி சீரியல் பிரபலங்கள், மோதலும் காதலும் சீரியல் தொடர் பிரபலங்கள்,நட்சத்திர நடிகர்கள் என பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இதோ.