
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஷாலினி .இவர் பேபி ஷாலினியாக குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது மூன்று வயதில் இருந்தே நடிக்க தொடங்கினார். விடுதலை, ராஜா சின்ன ரோஜா, பந்தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இதை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் 25 மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் நடிகை ஷாலினி .
இவர் தமிழில் கதாநாயகியாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், என பல படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழ், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து உச்சத்தை எட்டினார் ஷாலினி. ‘அமர்களம்’ படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நடிகர் அஜித்தை நடிகை ஷாலினி 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். நடிகை ஷாலினி உலக அளவில் மிகவும் பிரபலமான மைக்கேல் ஜாக்சன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இதில் முதலில் அது மைக்கேல் ஜாக்சன் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஆனால் அது உண்மையான மைக்கேல் ஜாக்சன் கிடையாது. அவரே போலவே இருக்கும் போலியுடன் தான் ஷாலினி புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.