வீரப்பெண்ணாக கலக்கிய கேப்டன் மில்லர் பட நடிகை பிரியங்காவின் சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்…!!

நடிகை பிரியங்கா மோகன், கடந்த 2021 ஆம் வருடத்தில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

   

முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் 2022 ஆம் வருடத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படமும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இது வரை, தன் திரைப்படங்களில், குடும்ப குத்து விளக்காக புடவை மற்றும் சுடிதாரில் அழகாக நடித்து வந்த பிரியங்கா மோகன், திடீரென்று கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.

தற்போது பொங்கல் முன்னிட்டு நாளை வெளியாக இருக்க படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.