
சன் டிவியின் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் புதிய தொடர் தான் சிங்க பெண்ணே என்ற சீரியல். இந்த சீரியல் தொடங்கி சில நாட்களை ஆன நிலையில் டிஆர்பியில் உச்சத்தை பிடித்துள்ளது. மேலும் இதற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.
இந்த சீரியலில் கதாநாயகி ஆனந்தி குடும்ப சூழ்நிலைக்கு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸில் வேலைக்கு சேர்கிறார். அங்கு வில்லனாக சந்திரகாந்த் இருக்கிறார். கார்மெண்ட்ஸியில் இவர் செய்யும் செயல்கள் பார்த்து பலரும் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சீரியலின் வில்லன் ரோலில் வரும் கருணாகரன்,நடிகர் விஜய் நடிப்பில் யாரும் எதிர்பார்க்காத அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட் என மொத்தமாக ஜெயித்த திரைப்படம் தான் மின்சார கண்ணா. அதில் நடிகர் விஜய்யின் அண்ணனாக கூர்கா வேடத்தில் குஷ்புவின் வீட்டில் நடித்தவர் தான் நடிகர் சந்திரகாந்த். மேலும் சந்திரகாந்த் நடிகை ஸ்ரீ பிரியாவின் தம்பிதான் என்றும் தெரியவந்துள்ளது.