
அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்ற தகவல் வெளியான நிலையில், இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்திற்கான முதல் செட்யூல் சென்னையில் தொடங்கியுள்ளது.
சீதா ராமம் என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமான நடிகை மிருனாள் தாகூர் தான் இந்த படத்தின் கதா நாயகியாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் கதாநாயகியாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனவே ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.