
70களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் தான் நடிகர் ஜெய்சங்கர். இவரை தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று செல்ல பெயரால் அழைக்கப்பட்டார்.
1965 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.சினிமாவை தாண்டி இவர் அன்றைய காலகட்டத்திலேயே பல சமூக நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.
இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.தமிழ் சினிமாவின் தற்போது பிரபல நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான,
‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் வில்லனாக புதிய அவதாரம் எடுத்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி சஞ்சய் விஜய் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
நடிகர் ஜெய்சங்கர் 2000 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி மாரடைப்பின் காரணமாக காலமானார். இவர் மகன் விஜய் தந்தையின் பெயரால் அறக்கட்டளை ஒன்று துவங்கி சமூக சேவைகளை செய்து வருகிறார்.
அதேபோல் சஞ்சய் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இவரின் மகன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.