
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் ராஜா ராணி , சந்திரமுகி ,சிவாஜி ,எதிர்நீச்சல், விசுவாசம் ,பிகில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 கோடி முதல் 10 கோடி வரை என்று தெரியவந்துள்ளது.
அந்த வகையில் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடிகைகளும் அதிகமான சம்பளம் வாங்கும் லிஸ்டில் நடிகை நயன்தாரா, முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்படுகிறார். தற்போது இவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிகை திரிஷா, ரீஎண்ட்ரீ கொடுத்து சினிமாவில் கலக்கிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, கமலுடன் தக்லைப் என நயன்தாராவை விரட்டி பிடித்து, திரிஷா அந்த இடத்தில் முன்னேறி வருகிறார்.
அந்த வகையில் நடிகை திரிஷா சுமார் ஆறு கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் நடிகை சாய் பல்லவி, நடிகை சமந்தா, ராஷ்மிகா மந்தனாவை பின்னுக்கு தள்ளி, கோலியுட்டின் அதிக சம்பளம் பெறும் நடிகையாக சாய்பல்லவி உள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்த பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா பிடித்துள்ளனர்.