
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வரும் நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் எஸ் குமரன் இயக்கத்தில் விகடன் குழு எழுதிய கதையில் உருவாகி இருக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதி.
இந்த சீரியலை விகடன் குழு தயாரித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வந்தனர். இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
சொந்தமாக முயற்சி செய்து பல நிறுவனங்களை தொடங்கி பிரபலமான கோதை குடும்பத்தை வைத்து தான் இந்த சீரியலின் கதைக்களம் நகர்ந்து வந்தது.
இதற்கு இடையில் அர்ஜுனன் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்ட ராகினி தனது பெற்றோரை ஏமாற்றி சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கி கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து ராகினி தமிழை எதிர்த்து சண்டை போட்டு வருகிறார். தற்போது அர்ஜுனை அவரின் அக்கா கணவர் பரமன் அடித்து சுயநலம் இல்லாமல் கோமா நிலைக்கு செல்லும்படி செய்து விடுகிறார்.
இந்நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. கடைசி நாள் சூட்டிங் ஸ்போட்டில் எடுத்த புகைப்படங்களை பட குழுவினர் மற்றும் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதை பார்த்த ரசிகர்கள் சீரியல் முடிவுக்கு வருகிறதா? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இதோ…