
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்த நிலையில், கடந்த வாரம் இப்படம் ரிலீசானது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க போவதாகவும், சினேகா நடிக்கப் போவதாகவும் தற்போது பிரியங்கா மோகன் நடிக்க போவதாகவும் தகவல் வெளிவந்தது.
ஆனால் தற்போது இவர்கள் யாருமே இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை மீனாட்சி சவுத்ரி என்பவர் தான் விஜய்க்கு ஜோடியாக தளபதி 68 ல் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.
இவர் ஃபெமினா மிஸ் இந்தியா என்று போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றவர். இவர் பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை பி ஆர் சவுத்ரி இந்திய ராணுவத்தின் கர்னலாக இருந்தார்.
பின்னர் ‘அவுட் ஆப் லவ்’ என்ற வெப் சீரியஸில் நடித்து சினிமாவுக்குள் என்ட்ரீ கொடுத்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் கைவசம் அதிக படங்களையும் வைத்துள்ளார்.
இந்நிலையில் லியோ படத்தில் திரிஷா பல ஆண்டுகளுக்குப் பின் விஜய்யுடன் ஜோடி சேர்வது ஜோடி சேர்ந்து நடித்த போது, இன்ஸ்டாவில் நடிகை திரிஷாவை அதிகமான பாலோவர்ஸ் பின் தொடர்ந்தனர். அந்த வகையில் தற்போது தளபதி 68 இல் நடிகை மீனாட்சி இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், இவருக்கும் தற்போது ஏராளமான வருவதாக தகவல் வெளியாகி உள்ளது