
ஏ.ஆர். ரஹ்மான், சக்ஸஸ் இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கம், சான்ஸே இல்லாத நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு இதையெல்லாம் தாண்டி எல்லாருக்கும் பிடிச்ச சிவகார்த்திகேயனின் ஹீரோயிஸம், அதையும் தாண்டி ‘ஏலியன்’ எனும் தமிழ்சினிமாவுக்கு புத்தம் புது கான்செப்ட்! என எல்லாமே இருந்து அயலான் படம் வெற்றிக்கு அந்நியமாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், ஆவரேஜ் ஃபீல் சினிமா ரசிகர்களும்தான் அயலானை ஓரளவு கொண்டாடுகிறார்கள். ஏலியனுக்காகவும், பாஸிங் காமெடிக்காகவும் சிலர் இதை ரசிக்கின்றனர். இதெல்லாம் சிவகார்த்திகேயனை கன்னாபின்னாவென கடுப்பாக்கியுள்ளன. சி.காவுக்கு பிரின்ஸ் அட்டர்ஃபிளாப் ஆகிவிட, மாவீரன் ஹிட்டா அல்லது ஆவரேஜா எனும் நிலையில் ஒரு மாதிரி கடந்து சென்றது. அதனால் ரவிக்குமாரின் இயக்கத்தில் சயின்ஃபிக்ஸன் படமான அயலானை பெரிதாய் நம்பியிருந்தார். ஆனால் படம் கைகொடுக்கவில்லை என்பதே உண்மை.
பொதுவான விமர்சனங்கள் அவரை பிழிந்தெடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் தனுஷின் வெறி ரசிகர்கள் சிவகார்த்திகேயனை புரட்டி எடுத்து வருவதுதான் அவரை அநியாயத்துக்கு காயப்படுத்தியுள்ளது. குறிப்பாக ‘D for Devil’ எனும் பெயரில் தனுஷின் வெறி ரசிகன் ஒருவர் போட்டிருக்கும் நீளமான பதிவு அனலைப் பற்ற வைத்துள்ளது.
அந்த ரசிகர் எழுதியிருப்பது இதுதான்..”நன்றி மறந்த மனுஷன் சிவகார்த்திகேயன்.
அவரு இன்னைக்கு நிற்கிற இந்த உயரம் தனுஷாலும் உருவானதுதான். தன்னோட 3 படத்துல தந்த ஸ்பேஷால சிவாவுக்கு பெரிய ப்ரமோஷன் கிடைச்சுது. அதுமட்டுமில்ல சிவகார்த்தியை வெச்சு எதிர்நீச்சல் படத்தை தயாரிச்சு அவரை ப்ரைம் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது தனுஷ் தான்.
காமெடி ஹீரோ மாதிரிதான் சிவகார்த்திகேயன் இருந்தார், ஆனால் தனுஷ் தயாரிச்ச ‘காக்கிச்சட்டை’ படம்தான் அவரை ஆக்ஷன் ஜானருக்குள்ளே கொண்டு வந்து நிறுத்துச்சு. சிவகார்த்தியை ஹிட் ஹீரோவாக்குனதுல, அனிருத்தின் இசைக்கு ரொம்ப பெரிய ஸ்பேஸ் இருக்குது. எதிர்நீச்சல், காக்கிச்சட்டைன்னு ரெண்டு படங்கள்ளேயும் சி.கா.வுக்காக அனியை இசையமைக்க வெச்சதும் தனுஷ்தான். இப்படி தனுஷின் தோளில் ஏறித்தான், தனுஷின் பணத்தில் ஏறித்தான் மேலே வந்தார் சிவகார்த்தி.
தன்னை நம்பி ஹிட் கொடுக்கிறவங்களுக்கு அவர் என்ன திருப்பி தருவார், எப்படி நன்றியோட இருப்பார்னு இமான் விஷயத்துலேயே நமக்கு தெரிஞ்சு போச்சே. அதைத்தான் தனுஷ்ட்டயும் பண்ணினார். நன்றி மறந்து அவரையே உரசிப் பார்த்தார்.
ஆனாலும் கூட தனுஷுக்கு கோபமோ, பழிவாங்குற எண்ணமோ வர்ல. தனுஷ் நினைச்சிருந்தால், சிவகார்த்தி படங்களுக்கு மியூஸிக் பண்ண வேண்டாம்னு அனிருத்தை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணியிருக்க முடியும். நெருங்கிய சொந்தக்காரரான தனுஷ் சொன்னால் தட்டாம கேட்டிருப்பார் அனிரூத். ஆனால் தனுஷ் அப்படி பண்ல, ‘பொழச்சுட்டு போடா தம்பி’ன்னு விட்டு விட்டார் சிவாவை. ஆனால் இந்த உண்மையெல்லாமே தெரிஞ்சிருந்தும் கூட நன்றி மறந்தது மட்டுமில்லாமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனுஷை தப்பா பேசி பார்க்கிறது. சிவகார்த்திக்கு வழக்கமாவே இருக்குது. எப்பவுமே கண்ணீர் விட்டு, கண்ணீர் விட்டு எதையும் சாதிக்குறதுதானே சிவகார்த்தியோட வழக்கம். சந்தானம் சொன்னது சும்மா இல்லையே, விருது வாங்குற இடத்துலேயும் விக்கி விக்கி அழுது சிம்பதி கிரியேட் பண்றதுதானே அவர் வேலையே” என்று திட்டி தீர்த்துள்ளார்.