
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.
இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் விஜயகாந்தின் திருமணம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜயகாந்த் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டுள்ளதாகவும், அதற்கு விஜயகாந்தின் அக்கா ஒத்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
அதாவது நடிகர் விஜயகாந்தின் ஜாதகத்தை ஜோசியரிடம் அவரது அக்கா கொண்டு சென்று கேட்ட போது, அந்த நடிகையை திருமணம் செய்து கொண்டால் விஜயகாந்த் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார் என ஜோசியர் கூற அத்தோடு அந்த பேச்சு முறிந்து போனதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு தான், குடியாத்தம் பக்கத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிரேமலதாவின் ஜாதகத்தை வாங்கி வந்த பின், இருவருக்கும் ஜாதகம் ஒத்துப்போக இறுதியில் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.