மூன்று முறையும் பெயிலியர் மாசத்தில் 20 நாள் வெளியூரில் தான்.. போண்டாமணி பட்ட கஷ்டம் ஓபன் டாக் செய்த நகைச்சுவை நடிகர்..

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான்  நடிகர் பாவா லக்ஷ்மண். இவர் தமிழ் சினிமாவின் நடிகர் வடிவேலு உடன் இணைந்து நகைச்சுவை நடிகராக  பல  படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் .சில வருடங்களாக இவர்  திரையுலகிலிருந்து ஓய்வெடுத்துள்ளார். சமீபத்தில் இவர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் இருந்தது கூட சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டது.

   

இந்நிலையில் இவர் சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு  பேட்டி கொடுத்துள்ளார் .அதில்  மறைந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி பற்றி கூறியுள்ளார். அவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. கிட்னி மாற்று சிகிச்சை பண்ணலாம் என்று எல்லாம் முயற்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால், கிட்னி கொடுக்கும் நபர் இறந்துவிட்டார்.

இதேபோன்று மூன்று முறை பெயிலியர் ஆன நிலையில் மருத்துவர்கள் அவரை அதிகமாக   உடம்பு அலைச்சல்  தராதீர்கள் என்று கூறினார்கள். நான் டாக்டர் சொன்னாதா கேட்ட  நான் எப்படி வீட்டிற்கு சோறு போடுவேன் என்று சொல்லி ப்ரோக்ராம் சென்று கொண்டிருந்தார் மாசத்துல 20 நாள் வெளியூர்ல தான் இருப்பாரு குழந்தை  மனைவி எல்லாம் அப்ப அப்ப பாக்க வருவார்.அவர் மனைவி   நான் என்ன செய்யப் போகிறேன் என்று ரொம்ப அழுதாங்க, ரொம்ப கஷ்டமா இருந்தது என்று கூறியுள்ளார்.