
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் ஒரு MBBS என்பது நாம் அறிந்த ஒன்றே, நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக நடன ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டார். அதன் மூலமாக மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ,ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.அதைத் தொடர்ந்து தமிழில் என் ஜி கே, பாவ கதைகள், கார்கி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ் கே 21 என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை சாய் பல்லவிக்கு பூஜா என்ற ஒரு தங்கையும் உள்ளார் . இவர் சமுத்திரக்கனியுடன் ‘சித்தரை செவ்வாணம்’ என்ற படத்தில் நடித்த பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர் தனது காதலர் வினீத்தை ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அறிமுகம் செய்தார்.அது சமூக வலைதளகளில் வைரலானது.
இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதன் புகைபட்டாங்களை சாய் பல்லவி வெளியிட்டு “உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துகள் பூஜா மேடம். உங்கள் நிச்சயதார்த்தம் காதல் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்நாளின் தொடக்கமாக இருக்கட்டும். உங்களில் இருவருக்கு வாழ்த்துகள்” என TAG செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.