சூப்பர் ஸ்டாரை விமானத்தில் சந்தித்த பிரபல நடிகை.. என்ன செய்துள்ளார் தெரியுமா?..இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.   இவர் தமிழ் சினிமா 40 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து  வருகிறார்.  இவர் நடிப்பில் சமீபத்தில் லால்  சலாம் படம் என்ற படத்தில் நடித்துள்ளார்.தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

   

நடிகர் ரஜினி மோடி  முதல் அம்பானி வரை அவரது நட்பு வட்டாரங்கள்  மிக  பெரியது அதனை அம்பானி வீட்டுத் திருமணத்தில் முந்தைய  கொண்டாட்டத்தின் இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  மூலம் தெரிகிறது. நாடு முழுவதும் செல்வாக்கும் மனிதராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் செல்லும்போது  அந்த விமானத்தில் நடிகை நிக்கி கல்ராணி வந்திருக்கிறார்.நடிகை நிக்கி கல்ராணி ரஜினிகாந்த் உடன்  புகைப்படம் எடுத்துள்ளார்.  அந்த  போட்டோவை நிக்கி கல்யாணி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல்  நடிகர் ரஜினிகாந்த் அவர்களின்  விமான டிக்கெட்டை வாங்கி அவரிடமே ஆட்டோகிராப்  வாங்கியுள்ளார்.  இதற்கு அவரது கணவரும்  நடிகருமான ஆதி இந்த பொன்னான வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.