
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
இந்த விடாமுயற்சி திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித், ரசிகர் ஒருவரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கி உள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், ரசிகர் எடுத்த வீடியோவை ஏன் அஜித் நீக்கி இருக்கிறார் என பலரும் அஜித் மீது கோபத்தோடு கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் அதனுடைய உண்மை இப்போதுதான் தெரிய வந்தது. அதாவது அஜித்துடன் சென்ற அவரது மகளை அந்த ரசிகர் வீடியோ எடுத்துள்ளார். இதனால் அப்பா என்கிற முறையில் கோபம் அடைந்த அஜித், அந்த ரசிகரின் போனை பிடிங்கி அந்த வீடியோவை நீக்கி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.