
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் தான் மறைந்த நடிகர் விஜயகாந்த். இவர் நடிகர் சங்க தலைவராக இருந்தார் போது கடனில் நடிகர் சங்கம் இருந்தது. விஜயகாந்த் அப்போது முன்னனி நடிகர்களிடம் ஆளுக்கும் சில லட்சங்களை கொடுங்கள் என்று கேட்ட ஆனால் யாரும் தர முடியவில்லை. இதை அடுத்து அனைவரையும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் இரவு நடத்தி அதன் மூலம் கிடைத்த பெரிய தொகையை கொண்டு நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார்.
அதே போன்று இப்போது நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுமான பணி பாதியில் நின்று பல மாதங்கள் ஆகிறது மேலும் அந்த பணியை தூவங்க வேண்டும் எனில் மீண்டும் பல கோடிகளை செலவிட்டால்தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி டாப் ஸ்டார்களாக உள்ள நடிகர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கோடி கொடுங்கள் அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டியை, வாங்குகிற கடனுக்கு ஈஎம்ஐ யாக கட்டி விடலாம்.
. நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகு அவரவர் கொடுத்த ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.இப்படி மொத்தம் 20 நடிகர்களிடம் தலா ரூ. ஒரு கோடி வீதம் ரூ. 20 கோடி முதல்கட்டமாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சொன்னவுடன் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, சிம்பு, தனுஷ்,விஷால் ஆகியோர் உடனே ஓகே சொல்லி விட்டார். இதை பற்றி ரஜினியிடம் சொல்லப்பட்டது ஆனால், அவர் அவரிடம் இருந்து எந்த ஒரு ரியாக்சனும் இல்லை .
அதே போல் நடிகர் அஜீத் இடம் தகவல்கள் கூறிய போது அவரிடமும் எந்த ஒரு பதிலும் இல்லை.நடிகர்கள் தரும் கோடி ரூபாய் பணத்தை வைத்து நடிகர் சங்கம் கட்டடம் கட்டி விடலாம். ஆனால் நாளை பணம் கொடுத்தவர்கள் அதிக உரிமை கொண்டாட வாய்ப்புள்ளதால் இந்த மாதிரியான முடிவு எடுத்துள்ளதாகவும் இந்த விஷயத்தில் ரஜினிகாந்த், அஜீத்குமார் இருவரும் எந்த பதிலும் சொல்லாமல் இதுவரை மௌனமகா இருந்து வருகின்றனர்.