முறையாக அனுமதி பெற்ற நிலையில் தமன்னாவின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி அமைச்சர்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து’ கல்லூரி’ என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.இவர் தமிழில் சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச்,  சுறா உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பு இல்லாமல் பாலிவுட் பக்கம் கவனத்தை  செலுத்தி வந்தார்.

   

இந்நிலையில் தமன்னா நடித்து  வரும் பாலிவுட் திரைப்படம்  மும்பை உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பிற்காக மாநில சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை நிறுவனம் அனுமதி பெற்று சான்றிதழ்  வாங்கி இந்த படப்பிடிப்பானது நடைபெற்று வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  மருத்துவமனையின்  தலைமை  மருத்துவரை தொடர்பு கொண்டு படபிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதை அடுத்து தலைமை மருத்துவர் படக் குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்தும்படி கூறியதால் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த மருத்துவமனையில் படப்பிடிப்புக்காக நாங்கள் போட்ட செட் வேஸ்ட் ஆகிவிடும் இதனால் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தலைமை மருத்துவரிடம் படப்பிடிப்பை நடத்த அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் கூறியதால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் தலைமை மருத்துவர் உறுதியாக இருந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தமன்னா உட்பட படக்குழுவினர் அனைவரும் திரும்பி சென்றதாகவும் தெரிகிறது.இதைக் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் மேனேஜரிடம் கூறியவாறு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் எனக்கு ரெண்டு கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் அனுமதி வாங்கி படப்பிடிப்பு  நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.