தப்பு பண்ணது அவங்க ஆனால் என்னை அடித்தார்கள்? போலீஸ்ம் எனக்கு உதவல! அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து கண்ணீர் மல்க விசித்திர…

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஆரம்பத்திலிருந்து ஏகப்பட்ட சண்டைகள் , சச்சரவுகள் என பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.  இன்றைய தினம் பிக் பாஸ் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம் என்ற டாஸ்க் கொடுத்தார்.  அதில் விசித்ரா தெலுங்கு  நடிகரின்  ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

   

அப்போது அப்படத்துக்கான ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்றது . இதற்காக அங்குள்ள ஓட்டல் அறையில் தங்கி ஷூட்டிங்கில் சென்றுள்ளார் விசித்ரா. தன்னை அந்த ஹீரோவிடம்  அறிமுகம் செய்ய சென்றபோது, அவர் பெயரை கூட கேட்காமல், நைட்டு ரூமுக்கு வந்திரு என சொல்லி உள்ளார்.ஹீரோ அழைத்தும் ரூமுக்கு செல்லாததால் இரவில் ஆட்களை விட்டு விசித்ராவின் ஓட்டல் அறையை தட்டி சிலர் ரகளை செய்துள்ளனர்.

அந்த ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தவரிடம் இதுபற்றி விசித்ரா சொன்னார். உடனே அந்த ஊழியர் விசித்ராவை ஒரு நாளைக்கு ஒரு அறையில் தங்க வைத்து அந்த ஹீரோவின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வைத்தாராம். பின் நாளில் அந்த ஓட்டல் ஊழியரை தான் விசித்ரா திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.ஒருநாள் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடந்தது , பைட்டர்கள் மற்றும் ஜுனியர் ஆர்டிஸ்டுகளுடன் ஒரு கலவர காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது ஆக்‌ஷன் சொன்னதும் என்னை ஒருவர் தவறாக தொட்டதை உணர்ந்தேன். இதையடுத்து அந்த ஷாட் ரீ டேக் எடுத்தனர் அப்போது மீண்டும் அதேபோல செய்தார் . பின்னர் மூன்றாவது டேக் எடுத்தபோது அந்த நபரை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்.உடனே அவனது கையை பிடித்து இழுத்து  ஸ்டண்ட் மாஸ்டரிடம் கொண்டு வந்து நிறுத்தினேன்.

அவர் அந்த நபரை தட்டிக் கேட்காமல் என்  கன்னத்தில் ஓங்கி அரைவிட்டார். நான் அப்படியே ஷாக்காகி நின்றேன். அவர் அடித்ததை  யாரும் தட்டிக்கேட்கவில்லை. அந்த சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.  நடிகர் சங்கத்திடம் இதுகுறித்து புகார் அளித்தேன். அப்போது அந்த நடிகர் சங்க தலைவர் இதையெல்லாம் மறந்துவிட்டு நடிக்க சொன்னார்.

அதன் பின்னர் போலீசிடம் சென்றேன். இதில்  எனக்கு யாருமே ஆதரவு அளிக்காததால் தான் நான் சினிமாவை விட்டே விலக முடிவு செய்தேன். அந்த ரணத்தில் இருந்து தன்னால் மீள முடியாததால் தான் 20 ஆண்டுகளாக சினிமாவில் கம்பேக் கொடுக்கவில்லை என்றும் கண்ணீர் உடன்  கூறினார் விசித்ரா. அவர் சொன்ன இந்த சம்பவம்  பற்றி நெட்டிசன்கள் எந்த படம் போன்ற விசையாங்களை கூறி வருகின்றனர்.அந்த படம் ‘பலேவடிவி பாசு’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்தபோது நடந்ததாகவும், அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ.விஜய் .அப்படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார் என்று கூறிவருகின்றனர் .