எல்லாத்துக்கும் காரணம் அப்பா தான்.. அப்பாவை கோர்த்து விட்டு.. எஸ்கேப் ஆன ஐஸ்வர்யா..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளிவந்தாலே, அவரின் ரசிகர்கள் அதனை வெறித்தனமாக கொண்டாடுவார்கள். அன்றிலிருந்து இன்று வரை, சூப்பர் ஸ்டாருக்கான எதிர்பார்ப்பு என்பது அப்படியே தான் இருக்கிறது.

   

ஆனால், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விக்ராந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் கிரிக்கெட்டையும், மதத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த நிலையில், படுதோல்வியை சந்தித்துள்ளது, ஐஸ்வர்யா ரொம்ப கவலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் மேக்கிங், திரைக்கதை என எதுவுமே எடுபடவில்லை என ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்த நிலையில், படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த அடி வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தன் அப்பா ரஜினிகாந்த் நடித்ததால் தான், உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது என்றும் எனவே அவருக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைத்தால் கூட இந்த படம் இந்த அளவுக்கு தோல்வியை சந்தித்து இருக்காது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புலம்பி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.