டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து கெத்து காட்டி வரும் சீரியல்… எந்த சீரியல் தெரியுமா?..

சென்ற வாரத்தில் தமிழ் சீரியல்களின் டி ஆர் பி  பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இருக்கிறது என்பதை பற்றி காண்போம்.

10 வது இடம்:

   

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகப்பட்டு வரும் சீரியல் தான் ‘பாண்டியன் ஸ்டோர் சீசன் 2.’ இந்த சீரியலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலானது 6.14 புள்ளிகள் பெற்று டிஆர்பி யில் 10 வது  இடத்தை பிடித்துள்ளது.

9 வது இடம்:

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்து வரும் சீரியல்தான் ‘ஆகா கல்யாணம்’ இந்த சீரியலில் 6.22  புள்ளிகள் பெற்று  TRP யில் 9 ஆவது இடத்தில் பிடித்துள்ளது.

8 வது இடம்:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் தான் ‘ பாக்கியலட்சுமி’ . இந்த சீரியலானது அனைத்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது 6.91 புள்ளிகள் பெற்று டிஆர்பி யில்இந்த சீரியல் 8 வது  இடத்தை பிடித்துள்ளது.

7 வது இடம்

சன் டிவியில் ஒரு சில காலகட்டத்தில்  டிஆர்பி யில் முன்னிலை   இருந்த சீரியல் தான் ‘சுந்தரி’ இந்த சீரியல் தற்போது 7.91  புள்ளிகள் பெற்று டிஆர்பி யில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

5 வது இடம்:

விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சீரியல் ‘சிறகடிக்க ஆசை’ இந்த சீரியல் டிஆர்பி யில் 8.23புள்ளிகளுடன்  ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சன் டிவியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘இனியா’ இந்த சீரியல் 8.23 புள்ளிகள் பெற்று டிஆர்பி யில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.

4 வது இடம்:

அண்ணன் தங்கை பாசத்தை வைத்து  சன் டிவி எடுக்கப்படும் சீரியல் தான் ‘வானத்தைப் போல’ இந்த சீரியல் 8.48 புள்ளிகள் பெற்று டிஆர்பி யில் 4 வது  இடத்தை பிடித்துள்ளது.

3. வது இடம்:

சன் டிவியில் ஆரம்பத்தில் டாப்பில்  இருந்த  சீரியல் ‘எதிர்நீச்சல் ‘. இந்த சீரியலானது டிஆர்பி யில் 9.33 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

2 வது இடம் :

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிவரும் சீரியல் தான் ‘கயல்’. இது சீரியல் ஆனது 9.66 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

1 வது இடம் :

சன் டிவியில் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே  டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்த சீரியல்  தான் சிங்கப் பெண்ணே சீரியல்  டிஆர்பி யில் 10.77 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.