
இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் வருடத்தில் வெளிவந்த சாட்டை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் யுவன். அதனைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனினும், அந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படமும் கைவிடப்பட்டது. அப்படத்திற்காகப் பரோட்டா தயாரிக்கக் கற்றுக்கொண்டவர். தற்போது ஓட்டல் ஒன்றில் பரோட்டா பாஸ்டராக வேலை செய்து கொண்டே யுவன் பேட்டி அளித்திருந்தார். இவரது இயற்பெயர் அஜ்மல் கான். இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் இன்று திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரமாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்றும் அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.