பேமஸ் ஆயிட்டாலே இப்படித்தான்….. ஜி பி முத்துவை துரத்தி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்ட இளைஞர்கள்….. வைரலாகும் வீடியோ….!!!

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்துவை இரண்டு இளைஞர்கள் துரத்திக் கொண்டு போய் சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. டிக் டாக் ஃபேமஸாக இருந்த காலத்தில் பிரபலமானவர் ஜி பி முத்து. பின்னர் அதனை தடை செய்த பிறகு youtube இல் தனக்கென ஒரு சேனலை திறந்து அதில் பாடல்களுக்கு ரீல் செய்து வெளியிட்டு வந்தார்.

   

அது மட்டும் இல்லாமல் இவருக்கு பலரும் லெட்டர் அனுப்புவார்கள். அந்த லெட்டரை பிரித்து படிப்பதையே ஒரு வீடியோவாக எடுத்து போட்டுக் கொண்டிருந்தார். இதன் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் . அதிலும் இவர் கூறும் செத்த பயலே, நார பயலே என்ற பேச்சு அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

ஆனால் அவர் தனது மகனின் உடல் நிலையை காரணமாக வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டார். அதன் பிறகு தற்போது பிரபலமாக இருக்கும் ஜி பி முத்துவை பார்ப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் காரில் சென்று கொண்டிருந்த இவரை இரண்டு இளைஞர்கள் பின்னாடியே துரத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரை கண்டுபிடித்து அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவர் ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு அந்த இளைஞருக்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வருகின்றது.  இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by AMãl ØYåsçõ (@amal_oyasco_)